புதுச்சேரி ஏப்ரல், 30
தமிழ் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் நான் இருப்பேன் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். புதுச்சேரியில் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவை ஒட்டி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கலை மாமணி விருதுகள் விழா நடைபெற்றது. இதில் பேசிய தமிழிசை, தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்தே அரசியல் நடக்கின்றது பாரதிதாசன் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக பாடி புதுச்சேரி அரசு அவருக்கு புகழ் செய்கின்றது என்றார்.