சென்னை ஏப்ரல், 29
‘ஜெய் பீம்’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நடிகர் மணிகண்டன் வெள்ளி திரையில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவர் ஏற்கனவே ‘நரை எழுதும் சுயசரிதம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். அது ஓடிடியில் மட்டுமே வெளியாகியிருந்தாலும், பல்வேறு விருதுகளை பெற்றிருந்தது. இந்நிலையில் வெள்ளி திரையில் முதலாவதாக மணிகண்டன் இயக்க உள்ள படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.