சென்னை ஏப்ரல், 27
பொன்னியின் செல்வன் ரெண்டு படத்திற்கு தமிழகத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. நாளை வெளியாக இருக்கும் இப்படத்திற்கு சிறப்பு காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் காட்சி காலை 9 மணி முதல் திரையிடப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.