சென்னை ஏப்ரல், 26
தமிழ் சினிமாவில் ஜோக்கர் பாத்திரத்தில் தொடங்கி இன்று நாயகன் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் சூரி. 90களில் இறுதிகள் இடையே சினிமாவில் நுழைந்துவிட்டாலும் தற்போது வெளியாகியுள்ள விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக மாறியுள்ளார். சூரியின் திரைப் பயணத்தை விளக்கும் வகையில் பழைய காமெடி சூரிக்கு, விடுதலை சூரி நம்பிக்கையூட்டுவது போன்ற போட்டோவை ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட நிகழ்ந்து போன சூரி நன்றி கூறியுள்ளார்.