சென்னை ஏப்ரல், 25
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக இருக்கும் அஜித் ஷாலினி தம்பதி தங்களது 23வது திருமணநாளை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான பாடத்தை ஷாலினி பகிர்ந்த நிலையில் ரசிகர்கள் அதனை வைரலாக்கியுள்ளனர். 1999ம் ஆண்டு இருவரும் முதல்முறையாக இணைந்து நடித்த அமர்க்களம் படத்தில் தான் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. தொடர்ந்து 2000 ல் இவர்களுக்கு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.