கர்நாடகா ஏப்ரல், 25
அண்டை மாநிலமான கர்நாடகாவில் மே 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 224 தொகுதிகளை கொண்ட மாநிலத்தில் போட்டியிட 3,044 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 678 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நேற்று வாபஸ் பெற இறுதி நாளாக இருந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் மொத்தம் 2,427 ஆண், 184 பெண், 2 மூன்றாம் மாநில வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.