கர்நாடகா ஏப்ரல், 24
கர்நாடகா சட்டசபை தேர்தல் காரணமாக பிரச்சாரத்திற்கு வந்த ராகுலின் ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். அதில் பணமோ பரிசு பொருட்களோ எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கர்நாடகாவுக்கு ஹெலிகாப்டரில் வந்தபோது பணம் கொண்டு வந்ததாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர். இதனால் தேர்தல் அதிகாரிகள் அவரது ஹெலிகாப்டரையும் சோதனை செய்தனர்.