கேரளா ஏப்ரல், 24
இரண்டு நாள் பயணமாக இன்று கேரளா வரும் பிரதமர் மோடி மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே இந்த ரயில் சேவை தொடங்க உள்ளது. ஏற்கனவே பிரதமர் கேரளா வருகை முன்னிட்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.