புதுடெல்லி ஏப்ரல், 26
வாரந்தோறும் ஞாயிறு அன்று ரேடியோ வாயிலாக மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுவார். வரும் 30 ஆம் தேதி 100-வது மனதின் குரல் நிகழ்வு நடப்பதால் இதனை விமர்சையாக கொண்டாட பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. இதனை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸின் ஜெயராம் ரமேஷ் அதானி விவகாரம், சீன பிரச்சனை, நடுத்தர நிறுவனங்களின் சீர்குலைவு குறித்து பேசாவிட்டால் அது மௌன குரல் தான் என்று கூறியுள்ளார்.