புதுடெல்லி ஏப்ரல், 23
அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதோடு தனது அரசு பங்களாவை ராகுல் காந்தி நேற்று காலி செய்தார். இதுகுறித்து பேசியுள்ள அவர் தங்கையும் காங்கிரசின் பொதுச் செயலாளருமான பிரியங்கா எனது அண்ணன் சொல்லியது அனைத்தும் உண்மையே அரசு பற்றி உண்மையை பேசியதால் கஷ்டத்தில் இருக்கிறார். ஆனால் நாங்கள் பயந்து விடவில்லை என சூளுரைத்தார்.