சென்னை ஏப்ரல், 21
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் இன்று களம் காண்கின்றன. இந்த போட்டி சென்னை அணியின் சொந்த மண்ணான சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக பெங்களூரு அணியை பந்தாடிய சென்னை அதே வேகத்தில் ஹைதராபாத் பந்தாடி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறுமா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று இரவு 7 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது.