மதுரை ஏப்ரல், 18
மதுரையில் நேற்று SDPI கட்சியின் மண்டல தலைவர்கள் மற்றும் மண்டல செயலாளர்கள் கூட்டம் மாநில பொதுச் செயலாளர் அஹமது நவவி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் முஹம்மது நஸ்ருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, மக்கள் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் செயல்பாடுகள் அமையும் படி வழிகாட்டுதல் இருக்க வேண்டும், SDPI கட்சியின் வர்த்தக அணி சார்பாக திருச்சியில் மே 5 ம் தேதி நடைபெற இருக்கின்ற மாநாட்டுக்கு எல்லா மாவட்டங்களில் இருந்து திரளாக வணிகர்களை அழைத்துச் செல்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் அனைத்து மண்டல தலைவர்கள் செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கோவை மத்திய மாவட்ட தலைவர் முஸ்தபா கலந்து கொண்டார். முஜிபுர் ரஹ்மான் மாநில செயற்குழு உறுப்பினரும்,
மதுரை மண்டல செயலாளர் நன்றியுரை நிகழ்த்தினார்.