சென்னை ஏப்ரல், 17
இந்தியாவிற்கு இந்தியாவின் பிரதமராக மோடியே மீண்டும் வருவார் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களிடம் பிரதமர் மோடி நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இதனால் இரண்டு முறை பிரதமர் ஆன அவர் மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராகி சாதனை புரிவார் என நம்பிக்கை தெரிவித்தார்.