சென்னை ஏப்ரல், 15
சமீபகாலமாக மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைவது அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் நேற்று மட்டும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சில நாட்களுக்கு முன் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியினர் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இபிஎஸ்க்கு ஆதரவு பெருகி வருவது, ஓபிஎஸ்க்கு பெரும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.