உத்தரப் பிரதேசம் ஏப்ரல், 17
உத்திரப் பிரதேசத்தில் பிரபல ரவுடி ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதல்வர் யோகி ஆட்சியில் ஆறு ஆண்டுகளில் 183 என்கவுண்டர் நடத்தி இருப்பதாக காவல்துறை சிறப்பு ஜெனரல் தெரிவித்திருந்தார். இந்த என்கவுண்டர்கள் குறித்து விசாரிக்க கோரி வழக்கறிஞர் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.