புதுடெல்லி ஏப்ரல், 16
மத்திய ஆயுத காவல் படை நுழைவுத் தேர்வை தமிழ்நாட்டு இளைஞர்கள் இனி தமிழில் எழுதலாம் என ஆளுநர் ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதற்காக பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறிய அவர், மத்திய ஆயுத காவல் படையில் சேர விரும்பும் தமிழக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.