சென்னை ஏப்ரல், 16
சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சார்பில் ஒடிசா மாநில முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழியல் இந்தியவியல் ஆய்வாளருமான பாலகிருஷ்ணன் எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நூலை வெளியிட தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார்.
இவ்விழாவில், `இந்து’ என்.ராம், ஒடிசா திறன் மேம்பாட்டு ஆணைய தலைவர் சுப்ரதோ பாக்சி, அரசு முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன், மானுடவியலாளர் பக்தவத்சல பாரதி, சர்மா மரபுக் கல்வி மைய நிறுவனர் சாந்தி பப்பு, நூல் ஆசிரியர் பாலகிருஷ்ணன், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் சுந்தர் கணேசன், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக பொதுவியல் ஆய்வு மைய ஆய்வாளர் பன்னீர்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.