சென்னை ஏப்ரல், 16
ஆர்எஸ்எஸ் அனுமதி கேட்ட அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் பேரணி நடத்த தமிழக காவல்துறை அனுமதி வழங்கியது. அதன்படி இன்று 47 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணியும் பொதுக்கூட்டமும் நடக்கிறது. பேரணி நடக்கும் பகுதிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதம் பற்றி தவறாக பேசக்கூடாது. கம்பு போன்ற ஆயுதங்கள் எதையும் கையில் ஏந்தி செல்லக்கூடாது உள்ளிட்ட 12 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.