மும்பை ஏப்ரல், 16
ஐபிஎல் 2023 சீசனில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பையில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டியில் குஜராத், ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. குஜராத் மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளும் வலுவான நிலையில் உள்ளதால் இரண்டாவது போட்டியில் மிகவும் சுவாரசியம் இருக்கும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.