புதுடெல்லி ஏப்ரல், 16
மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உள்ளார். சமீபத்தில் அவருக்கு சிபிஐ அனுப்பப்பட்டதை அடுத்து அவர் காலை 11 மணிக்கு சிபிஐ தலைமையகத்துக்கு செல்கிறார். பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் டெல்லி அமைச்சர்கள் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியினர் வருவார்கள் என்பதால் அப்பகுதியில் காவல் துறை பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.