கர்நாடகா ஏப்ரல், 16
பிஜேபியில் இருந்து விலகுவதாக பிரபல ரவுடி பைட்டர் ரவி அறிவித்துள்ளார். சமீபத்தில் பிரதமர் பெங்களூரு வந்தபோது பைட்டர் ரவி நேரில் வரவேற்றது சர்ச்சையானது. தற்போது கர்நாடகா தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததையடுத்து பாஜகவில் இருந்து விலகி உள்ளார். ரவுடி என்பதால் இவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் மணிகண்டன் ரத்தோட் எனும் ரவுடிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.