சென்னை ஏப்ரல், 14
நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாம் என அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். பேட்டியளித்த அவரிடம் அம்பேத்கருக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவிக்க உள்ளனர் .அவர் அரசியலுக்கு வருவாரா என கேள்வி எழுப்பப்பட்டது. பதில் அளித்த ஜெயக்குமார், அவரும் அரசியலுக்கு வரட்டும். ஆல்வேஸ் வெல்கம் சும்மா நானும் அரசியலில் குதிக்கிறேன் என்று குதிக்க கூடாது. வந்து பாருங்க எவ்வளவு கஷ்டம் என தெரியும் என்றார்.