சென்னை ஏப்ரல், 13
RR க்கு எதிரான போட்டியில் கடைசி 2 ஓவரில் 40 ரன்கள் தேவை என்ற நிலையில், 19வது ஓவரில் ஜடேஜா ஒரு ஃபோர், இரண்டு சிக்ஸர் அடித்து ஆட்டத்தை சிஎஸ்கே பக்கம் திருப்பினார். கடைசி ஓவரில் இரண்டாவது, மூன்றாவது பந்தில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர் அடித்து ரசிகர்களின் இதயத்துடிப்பு எகர வைத்தார் தோனி. மூன்று பந்துகளில் ஒரு சிக்ஸ் தேவை என்ற நிலையில் கடைசி பந்து வரை கொண்டு சென்று சிஎஸ்கே ரசிகர்களின் இதயத்துடிப்பை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டார் கேப்டன் தோனி.