புதுடெல்லி ஏப்ரல், 11
ஐபிஎல்லில் இன்று நடைபெறும் 16வது போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது மும்பை அணி. இந்த போட்டி இரவு 7:30 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது. டெல்லி அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்வியடைந்துள்ளது. இதே போல் மும்பை அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. இன்றைய போட்டியில் இரண்டு அணியும் வெற்றிக்கு போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும்.