சென்னை ஏப்ரல், 13
புலி வருகிறது என்பது போல திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக சில மாதங்களாக கூறி வருகிறார் அண்ணாமலை. அவர் சொன்ன தேதி ஏப்ரல் 14 என்பது நாளைய தினமாக உள்ள நிலையில் பட்டியலை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திமுக அமைச்சர்கள் ஊழல் பட்டியல் 14 வெளியாகும் என்று கூறி வருகிறார். அரசியல் ரீதியாக உற்று நோக்கப்பட அண்ணாமலை எடுத்த உத்தியாகவும் இது பார்க்கப்படுகிறது.