அசாம் ஏப்ரல், 12
அசாமில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, ஒரு காலத்தில் வடகிழக்கு மாநிலங்கள் காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. ஆனால் ராகுலின் பாதயாத்திரை நடந்த பின் மூன்று மாநிலத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது. மூன்று மாநிலங்களைப் போல் நாடு முழுவதும் இருந்து காங்கிரஸ் கட்சி விரைவில் மக்களால் விரட்டி அடிக்கப்படும் என்றார். மேலும் காங்கிரசார் பிரதமரை எந்த அளவுக்கு விமர்சிக்கிறார்களோ அந்த அளவு பாஜக வளரும் என்றார்.