புதுடெல்லி ஏப்ரல், 11
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய அந்தஸ்து கிடைத்ததற்கு கட்சி தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். குறுகிய காலத்தில் இந்த அற்புதத்தை நிகழ்த்தியதற்கு நன்றி கூறிய அவர் கட்சி மீது நாட்டு மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு இதுவே சான்றாகும். மக்கள் மிகப்பெரிய பொறுப்பை வழங்கியுள்ளனர். மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியம் இல்லை என்றார்.