அமெரிக்கா ஏப்ரல், 11
அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு வயது நாய்க்குட்டிக்கு கின்னஸ் உலக சாதனை சான்று வழங்கப்பட்டுள்ளது. பெண் நாயான இது இரண்டு வயது ஆன நிலையிலும், ரூபாய் நோட்டை விட சிறியதாகவும் டிவி ரிமோட்டை விட குள்ளமாகவும் இருக்கிறது. 9.14 சென்டிமீட்டர் உயரமும் 12.7 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட இந்த நாயை அங்கீகரித்து கின்னஸ் சாதனை அமைப்பு உலகிலேயே மிகச் சிறிய வாழும் நாய் என்று சான்றளித்துள்ளது. இந்த க்யூட்டான நாயின் பெயர் பியர்ஸ்.