நீலகிரி ஏப்ரல், 11
முதுமலை வந்து தங்களை நேரில் சந்தித்து பேசிய பிரதமர் மோடி இடம் வைத்த கோரிக்கை குறித்து ஆஸ்கர் தம்பதி பொம்மன் வெள்ளி மனம் திறந்து உள்ளனர். குடிநீர், இருப்பிடம் உள்ளிட்டவற்றில் நாங்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். எங்களுக்கு சரியான வீடு இல்லாததை எடுத்துரைத்தோம். இங்கு வாழும் பழங்குடி மலைவாழ் மக்களுக்கு வீடு கட்டி தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம் என்றுள்ளனர்.