கீழக்கரை ஏப்ரல், 11
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பொதுநல சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை நேரத்தில் பல்வேறு விளையாட்டுக்களில் ஆர்வம் கொண்டவர்களாக அனைவரும் இணைந்து விளையாடுகின்றனர்.
இந்நிலையில் விளையாடுவதற்கு தேவையான உபகரண பொருட்கள் வழங்குமாறு மக்கள் சேவை அறக்கட்டளையிடம் கோரிக்கை வைத்தனர்.
இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் M.K.E உமர் விளையாட்டு உபகரண பொருட்களை வழங்கி இளைஞர்களை விளையாட்டில் சாதனை படைக்க வேண்டுமென வாழ்த்தினார்.
இநிகழ்ச்சியில் கீழக்கரை ரோட்டரி கிளப் தலைவர் சம்சுல் கபீர்,KLK வெல்ஃபேர் கமிட்டி செயலாளர் ஜஹாங்கீர் அரூஸி, தில்லையேந்தல் ஊராட்சி மன்ற துணை தலைவர் மஹசூக்பானு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர்./தாலுகா நிருபர்.
கீழக்கரை.