அமெரிக்கா ஏப்ரல், 11
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன் மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் துணை அதிபர் பதவிக்கு கமலஹாரிஸூம் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை. முன்னதாக குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தார். இதனால் ஜனநாயக கட்சி சார்பாக மீண்டும் பைடனை நிறுத்த அக்கட்சி ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது.