சென்னை ஏப்ரல், 11
ஆளுநர் ரவியின் செயல்பாட்டை திமுகவினரால் சீரழித்துக் கொள்ள முடியவில்லை என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். ஆளுநர்கள் வெறும் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல அவர்களும் ஆட்சியின் அங்கம் என்று கூறிய அவர், பிரதமர் மோடியை நேரடியாக எதிர்க்கும் துணிவு இல்லாததால் ஆளுநரை இலக்காக்குவதாகவும், சட்டமன்ற விதிகளை தளர்த்தி ஆளுநருக்கு எதிரான விமர்சனங்களை அனுமதித்தது தவறான முன்னுதாரணம் எனவும் சாடியுள்ளார்.