திருச்சி ஏப்ரல், 11
திருச்சியில் வரும் ஏப்ரல் 24ம் தேதி ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் மூன்று லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கூறியுள்ளார். அதிமுக கட்சி முழுமையாக இபிஎஸ் பக்கம் சென்று விட்டதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் கட்சித் தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை இந்த மாநாடு நிரூபிக்கும் இந்த மாநாடு நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.