கர்நாடகா ஏப்ரல், 10
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் பத்தாம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 13ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இன்று முதல் வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிடவுள்ளது. இந்த தேர்தலில் புதிய முகங்களை களம் இறக்க கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி இதுவரை 166 தொகுதிகளுக்கு இரண்டு கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.