பாகிஸ்தான் ஏப்ரல், 11
பாகிஸ்தானின் தென்மேற்கு மகாணமான பலுசிஸ்தானில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு காவல்துறையினர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற பிரிவினைவாத குழு பொறுப்பேற்றுள்ளது. பலுசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவில் பரபரப்பான சந்தையில் காவல்துறை வாகனத்தை குறிவைத்து குண்டு வீசி வெடிக்க வைத்தது தெரியவந்துள்ளது.