மைசூர் ஏப்ரல், 9
மைசூரில் நடைபெறும் ப்ராஜெக்ட் டைகர் 50வது ஆண்டு நிறைவு விழாவை குறிக்கும் மெகா நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி சமீபத்திய புலிகள் கணக்கெடுப்பு தரவுகளை வெளியிட உள்ளார். அதோடு 50 ஆண்டுகள் நிறைவு பெற்ற ப்ராஜெக்ட் டைகர் நினைவு நாணயமும் வெளியிட இருக்கிறார். வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பாக பல அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.