சென்னை ஏப்ரல், 6
பிரதமர் மோடி தமிழகம் வருவதை ஒட்டி சென்னை மற்றும் முதுமலையில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்படுகிறது. வரும் எட்டாம் தேதி சென்னைக்கும் ஒன்பதாம் தேதி முதுமலைக்கும் பிரதமர் மோடி வருகை தருகிறார். இதனை முன்னிட்டு சென்னை மற்றும் முதுமலையில் ட்ரோன்கள் பறக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் பிரதமர் மோடி பங்கேற்கும் பகுதிகளில் மட்டும் 2000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.