புதுடெல்லி ஏப்ரல், 4
ரயிலில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட கட்டண சலுகை கொரோனாவில் பரவலின் போது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த சலுகையை மீண்டும் கொண்டு வர வேண்டி பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். அதில் மத்திய அரசின் பட்ஜெட்டில் மூத்த குடிமகனின் கட்டண சலுகைக்கான நிதி ஒதுக்கி உள்ளது. பெரிய கடலில் சிறுதுளி போன்றது இந்த செலவழிப்பால் அரசு ஒன்றும் ஏழையாகி விடாது என்று கூறியுள்ளார்.