பஞ்சாப் ஏப்ரல், 3
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள படாலா ரயில் நிலையத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சாலை பணிகளுக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீடு, மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம், விவசாய கடன்களுக்கு வட்டி தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டதோடு ரயில் நிலையத்தில் கூடாரம் அமைத்தனர்.