சென்னை ஏப்ரல், 3
தியேட்டர்கள், குளிர்சாதன அரங்கங்களில் இருப்பவர்கள் மாஸ்க் அணியுமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதை உத்தரவாக பிறப்பிக்காமல் அறிவுறுத்தலாக தெரிவித்துள்ளோம். அதே நேரத்தில் பொதுவெளியில் செல்வோருக்கு அறிவுறுத்தல்கள் ஏதும் வழங்கப்படவில்லை. ஆனாலும் முதியோர், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள் ஆகியோர் வெளியே செல்லும்போது முக கவசம் அணிந்து செல்வது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.