சென்னை ஏப்ரல், 3
ஐபிஎல் 2023 சீசனில் இன்று சென்னை, லக்னோ அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டி என்பதால் சென்னை அணி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். சென்னை லக்னோ இரு அணிகளுக்கும் இது இரண்டாவது போட்டி. குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியது. இதனால் இன்று சென்னையின் வெற்றியை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.