கர்நாடகா ஏப்ரல், 1
கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 9ம் தேதி முதல் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் இருந்து ஜெய்பாரத் என்ற பாத யாத்திரை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.