சென்னை மார்ச், 30
அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வாகியுள்ள எடப்பாடி முதன்முறையாக அறிக்கையை வெளியிட்டார். அதில் அதிமுகவில் உறுப்பினர்கள் பதிவை புதுப்பிக்கவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்கள் வரும் ஐந்தாம் தேதி முதல் கட்சி தலைமை அலுவலகத்தில் விநியோகிக்கப்படும். படிவங்களை பூர்த்தி செய்து தலா 10 ரூபாய் வீதம் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.