சென்னை மார்ச், 29
பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ் கங்கனா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது வடிவேலுவுக்கும் வாசுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அப்படி எதுவும் இல்லையாம். வடிவேலு படத்தில் தனது காட்சிகள் அனைத்தையும் சுமூகமாக முடித்துக் கொடுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.