சென்னை மார்ச், 28
சென்னையில் உள்ள கடைகளில் பெயர் பலகைகளை தமிழில் வைக்குமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழைத் தேடி எனும் இயக்கத்தின் ஒரு பகுதியாக தமிழ் மொழி மீட்டெடுப்பு தொடர்பான துண்டறிக்கைகளை ராமதாஸ் வழங்கினார். அப்போது தமிழில் பெயர்ப் பலகை வைக்கவில்லை எனில் கருப்பு மை கொண்டு அழிக்கும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார். அழிவின் விளிம்பில் தமிழ் இருப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.