சென்னை மார்ச், 28
தமிழகத்தில் 20 லட்சம் பேர் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்கவில்லை என தெரியவந்துள்ளது. ஆதார் எண்-பான் இணைப்புக்கான அவகாசம் வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் 60 லட்சத்துக்கும் அதிகமானோர் பான் அட்டை வைத்துள்ளனர். இதில் இதுவரை சுமார் 40 லட்சம் பேர் ஆதார் உடன் இணைத்துள்ளனர். இன்னும் 20 லட்சம் பேர் இணைக்கவில்லை என தகவல் தெரிவித்துள்ளனர். எனவே விரைந்து செயல்பட பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.