கொச்சி மார்ச், 27
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் இன்னசன்ட் சிகிச்சை பலனின்றி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இவர் தமிழில் லேசா லேசா, நான் அவளை சந்தித்தபோது, ஆகிய இரு படங்களில் நடித்துள்ளார் மலையாளத்தில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 75 வயதான இன்னசென்ட் மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.