புதுடெல்லி மார்ச், 26
ராகுல் பதவி நீக்கம் விஷயத்தில் பாஜக சற்று பொறுத்து இருக்க வேண்டும் என பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், தன்னை பொறுத்தவரை ராகுலுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை அதிகப்படியானதாக தோன்றுகிறது. அவர்கள் பெரிய மனதை காட்டி இருக்கலாம். ராகுல் மேல்முறையீடு செய்து அங்கு ஏதும் கிடைக்காத போது நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றார்.