சென்னை மார்ச், 25
காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் பேச்சு தொடர்பாக பாஜகவினர் தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை என தீர்ப்பு வந்ததும், அவரை பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ள மத்திய பாஜக அரசை வன்மையாக கண்டித்த அவர் எதிர்கட்சிகளின் ஒற்றுமை பாசிஸ்டுகளை அச்சமூட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.