சென்னை மார்ச், 24
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக பிரமுகர் ராகவனை முதல்வர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளனர். இதை அடுத்து என்னதான் எதிர்க்கட்சியாக இருந்தாலும் முதல்வரும், பாராளுமன்ற உறுப்பினரும் நேரில் வந்து விசாரித்தது மனிதாபிமானத்தின் உச்சம் என பாஜகவினர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்து வருகின்றனர் மேலும் ராகவனுக்கு இன்று ஓபன் ஹார்ட் சர்ஜரி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.